Published : 05,Jan 2022 04:28 PM

விவோ வி23, வி23 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம்!

Vivo-V23-and-V23-Pro-smartphones-launched-in-India-with-colour-changing-glass

சீன ஸ்மார்ட்போன் தயரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் வி23 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் வி23 ப்ரோ வரும் 13-ஆம் தேதி முதலும், வி23 வரும் 19-ஆம் தேதி முதலும் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

பலத்த எதிர்பார்ப்புக்கு நடுவே புத்தாண்டு தின வரவாக அமைந்துள்ளது இந்த வி23 சீரிஸ் போன்கள். முதல்முறையாக இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கலர் மாறும் கிளாஸ்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது வி23 சீரிஸ். இதில் இடம் பெற்றுள்ள Fluorite AG கிளாஸின் மீது சூரிய ஒளி மற்றும் புற ஊதா கதிர்கள் பட்டால் அதன் நிறம் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வி23 சீரிஸ் போன்கள் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வி23 ப்ரோ போனின் விலை 8GB+128GB வேரியண்ட் 38,990 ரூபாய், 12GB+256GB வேரியண்ட் 43,990 ரூபாய். மறுபக்கம் 8GB+128GB வேரியண்ட் வி23 29,990 ரூபாய், 12GB+256GB வேரியண்ட் 34,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்தி : விவோ வி23 சீரிஸ் போனின் சிறப்பம்சங்கள்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்