Published : 04,Jan 2022 08:45 PM

உ.பி: பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டிய காங்கிரஸ் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு

Cong-leader-who-showed-black-flags-to-PM-in-Sultanpur-shot-at-in-UP

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியின் போது கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் தலைவர் ரீட்டா யாதவ் மீது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

லக்னோ-வாரணாசி நெடுஞ்சாலையில் ரீட்டா யாதவின் கார் ஓட்டுநரை துப்பாக்கி முனையில் நிறுத்தி, அவர்மீது 3 நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். சுல்தான்பூரில் உள்ள லாம்ஹுவா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத அந்த 3 நபர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

image

ரீட்டா யாதவின் காலில் சுடப்பட்டு, அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ரீட்டா யாதவ், சுல்தான்பூரில் நவம்பர் 16 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியில் கருப்புக் கொடி காட்டியதற்காக சமீபத்தில் செய்திகளில் இடம்பிடித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்