தமிழ்நாட்டில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிரார்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி செலுத்தும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு அரசு மேல்நிலை பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முதல்வருடன் அமைச்சர் மா.சுப்ரமணியம், பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வை தொடங்கி வைத்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார். நிகழ்ச்சி மேடையில் மட்டுமன்றி, இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். தனது அப்பதிவுகளில், “பெற்றோர்களே! எவ்விதத் தயக்கமுமின்றி 15-18 வயதுக்குட்பட்ட உங்கள் பிள்ளைகளை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துங்கள்!
பெற்றோர்களே! எவ்விதத் தயக்கமுமின்றி 15-18 வயதுக்குட்பட்ட உங்கள் பிள்ளைகளை #COVID19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துங்கள்!
நீங்களும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்!
மக்கள் இயக்கமான இதில் உங்களின் பங்களிப்புதான் கொரோனாவில் இருந்து தமிழகத்தைக் காக்கும்! pic.twitter.com/PsQXbKaU9C — M.K.Stalin (@mkstalin) January 3, 2022
நீங்களும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்! மக்கள் இயக்கமான இதில் உங்களின் பங்களிப்புதான் கொரோனாவில் இருந்து தமிழகத்தைக் காக்கும்!” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி: சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது பெற்றோர்கள் உடனிருக்க வேண்டும் என அறிவிப்பு
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?