ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் செகெண்ட் லுக் வெளியாகியுள்ளது.
விமர்சன ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் மலையாள சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய ரசிகர்களிடமும் பாராட்டுகளைக் குவித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தினை தமிழில் இயக்குநர் கண்ணன் ரீமேக் செய்து வருகிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். தமிழிலும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தலைப்பிலேயே உருவாகும் இப்படத்தில் நாயகனாக ராகுல் ரவீந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் வெளியாகி தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், புத்தாண்டையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், இன்று செகெண்ட் லுக் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷும், செகெண்ட் லுக் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் இருக்கும் படத்துடன் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப் பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்து பல்வேறு சர்வதேச விருதுகளையும், சமீபத்தில் கேரள மாநில அரசின் விருதினையும் வென்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. விரைவில் ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்