Published : 03,Jan 2022 04:02 PM

மீண்டும் சொற்ப ரன்களில் அவுட் ஆன புஜாரா, ரஹானே! - இந்திய அணி திணறல்

India-loses-3-wickets-within-scoring-50-runs-against-South-Africa-in-Test-match-and-Pujara-Rahane-once-again-played-an-embarrassing-knock-with-their-bat

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களம் இறங்கினர். மயங்க் 26 ரன்களில் அவுட்டானார். பின்னர் வந்த இந்திய அணியின் சீனியர் வீரர்கள் புஜாரா (3 ரன்கள்) மற்றும் ரஹானே (0 ரன்கள்) சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இருவரும் தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

புஜாரா கடைசியாக விளையாடிய 22 டெஸ்ட் இன்னிங்ஸில் மூன்று முறை டக் அவுட்டாகி உள்ளார். ஏழு முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ளார். இரண்டு முறை மட்டுமே அரை சதம் பதிவு செய்துள்ளார். ரஹானே கடைசியாக விளையாடி உள்ள 11 டெஸ்ட் இன்னிங்ஸில் இரண்டு முறை டக் அவுட்டாகி உள்ளார். இரண்டு முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ளார். ஒரே ஒரு முறை அரை சதம் பதிவு செய்துள்ளார். 

அணியில் இளம் வீரர்கள் அதிகம் இருந்தும் தொடர்ச்சியாக அனுபவ வீரர்களான இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது விமர்சனங்களை எழுப்பி உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் அவர்களது மோசமான பேட்டிங் ஃபார்ம். 

தொடர்புடைய செய்தி : ஜோஹனஸ்பெர்க் டெஸ்ட்: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் - கேப்டன் ஆனார் கே.எல்.ராகுல்  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்