[X] Close

தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாடு: பாதிக்கப்படும் சிறுதொழில் மீனவர்கள்

Fishermen-affected-near-Ramanathapuram

நாகை மாவட்டத்தின் வேதாரண்யம் கடற்பகுதியில், விசைப்படகுகளைப் பயன்படுத்தும் மீனவர்களில் சிலர் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் பைபர் படகுகளை உபயோகிக்கும் மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் தாலுக்காவில் பெரும்பாலான மீனவர்கள் பைபர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் மீன்பிடிக்கும் கடல் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி நாகை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் விசைப்படகில் சென்று மீன்பிடிக்கின்றனர். அப்போது அவர்கள் பைபர் படகு மீனவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் மீன்பிடிக்க முடியாமல் வெறும் படகுடன் கரை திரும்ப வேண்டிய நிலை ஏற்படுவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் கடலில் மீன்வளம் முற்றிலும் அழியும் நிலை ஏற்படுவதோடு பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து சிறுதொழில் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்படுவதால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து சிறிய படகுகளை பயன்படுத்தும் மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close