Published : 03,Jan 2022 08:07 AM
தென்னாப்ரிக்க மண்ணில் வரலாறு படைக்குமா இந்தியா?

இந்தியா தென்னாப்ரிக்க அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
ஜோஹனஸ்பெர்க் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30மணிக்கு போட்டி தொடங்குகிறது. தென்னாப்ரிக்க அணியின் கோட்டையாக கருதப்படும் சென்ச்சூரியன் மைதானத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த உற்சாகத்தில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் இரண்டாது டெஸ்ட் போட்டியையும் வென்று தென்னாப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் விராட் கோலி தலைமையில் முதல் டெஸ்ட்டில் களமிறங்கிய வீரர்களே இரண்டாவது டெஸ்ட்டிலும் விளையாடுவார்கள் என கூறப்படுகிறது. எல்கர் தலைமையிலான தென்னாப்ரிக்க அணியில் டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்த டிகாக்கிற்கு பதிலாக கைல் வெரைன் விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என தெரிகிறது. சொந்த மண்ணில் தொடர் இழப்பை தவிர்க்க தென்னாப்ரிக்க அணி தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.