[X] Close

பாலியல் வன்கொடுமை: படுகாயங்களுடன் இளம்பெண் மீட்பு

Young-woman-sexual-abuse

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இளம் பெண்ணை கல்லால் அடித்து துன்புறுத்திய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செஞ்சியில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸில் முகம் சிதைந்த நிலையில், இளம் பெண் ஒருவரை போலீசார் மீட்டுள்ளனர். காந்தி சந்தைப் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ‌படுகாயங்களுடன் மயங்கி கிடந்த அந்த பெண்ணுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் யார்? அவர் கடத்தப்பட்டாரா? கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் முகம் சிதைந்த நிலையில் உள்ளதால் அந்த பெண் யார் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close