Published : 02,Jan 2022 06:17 PM
கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி - PSG அணி தகவல்

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது PSG கால்பந்தாட்ட கிளப் அணி. 34 வயதான மெஸ்ஸி, அர்ஜென்டினா மற்றும் PSG அணிக்காக விளையாடி வருகிறார்.
தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக PSG அணி தெரிவித்துள்ளது. பிரெஞ்சு கோப்பைக்கான தொடரில் Vannes அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட இருந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மெஸ்ஸி மட்டுமல்லாது அந்த கிளப் அணியை சார்ந்த மேலும் மூன்று வீரர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் தினசரி எண்ணிக்கை 2 லட்சம் என உள்ளது.