Published : 02,Jan 2022 04:56 PM

அடிபட்ட காயத்துடன் கடலில் சுற்றி வரும் சுறா மீன்!

Shark-fish-circling-in-the-sea-with-a-stab-wound

கடலில் காணப்படும் மீன் இனங்களில் மிகவும் முக்கியமானது சுறா மீன்கள். இந்த நிலையில் மெக்சிகோவில் பெரிய வெள்ளை நிற சுறா மீன் ஒன்று அடிபட்ட காயத்துடன் கடலில் சுற்றி வருவதை கவனித்துள்ளார் ஆழ்கடல் நீச்சல் வீரர் Jalil Najafov. மெக்சிகோவில் நீந்திய போது இதனை அவர் கவனித்துள்ளார். 

“சுமார் 15 அடி நீளமுள்ள அந்த வெள்ளை சுறாவின் பக்கவாட்டில் பெரிய காயத்தின் தழும்பு ஒன்றை இருப்பதை கவனித்தேன். அதை பார்த்ததும் நான் அதிர்ச்சி கொண்டேன். வழக்கமாக கடலில் காணப்படும் பெரிய உயிரினங்களில் ஒன்று சுறா மீன். அப்படிப்பட்ட ஒரு இனத்தை சார்ந்த சுறா ஒன்றில் உடலில் வட்ட வடிவிலான கடிபட்ட காயம் இருப்பதை கவனிக்க முடிந்தது. அந்த காயம் அதற்கு எப்போது ஏற்பட்டது. எப்படி கடிக்கப்பட்டிருக்கும் என்பது தெரியவில்லை. ஒருவேளை கடலில் உள்ள மற்றொரு சுறா அதனை கடித்திருக்கலாம். அது பார்க்க வட்ட வடிவில் இருந்தது” என தெரிவித்துள்ளார் அவர். 

சுறாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் விவாதமாக எழுந்துள்ளது. கடிபட்ட சுறா பெண் என தெரியவந்துள்ளது. அதை வைத்து அது இனப்பெருக்கத்தின் போது ஏற்பட்ட காயமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. சிலர் சுறா கூட்டத்திற்குள் ஏற்பட்ட மோதலாக கூட இது இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்