பிரபல ரவுடியுடன் இணைந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து நிலத்தை அபகரிக்க முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் பிரபல ரவுடி குணா. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சுங்குவார்சத்திரம் அருகே கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் கடந்த ஆண்டு குணா கைதானார்.
அதன்பின்பு ஜாமீனில் வெளியே வந்தவர், சில நாட்களாக தலைமறைவாக உள்ளார். போலீசார் குணாவை தேடி வருகின்றனர். இந்நிலையில் கீரநல்லூர் நில அபகரிப்பு வழக்கில் குணாவுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வரும் மதுரமங்கலத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
எவரேனும் பொதுமக்களுக்கும் அவர்களது சொத்துக்கும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்.
Loading More post
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்