ரூ.1 கோடி மதிப்பிலான விவேகம் உட்பட பல திரைப்பட டிவிடிக்கள் பறிமுதல்

ரூ.1 கோடி மதிப்பிலான விவேகம் உட்பட பல திரைப்பட டிவிடிக்கள் பறிமுதல்
ரூ.1 கோடி மதிப்பிலான விவேகம் உட்பட பல திரைப்பட டிவிடிக்கள் பறிமுதல்

சென்னையை அடுத்த கொளத்தூரில் ஒரு கோடி மதிப்பிலான விவேகம், பொதுவாக எம் மனசு தங்கம், விக்ரம் வேதா உள்ளிட்ட புதுப்பட டிவிடிக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமீப காலமாக திருட்டு டிவிடிக்கள், உரிமம் பெறாத டிவிடிக்கள் புழக்கத்தில் இருப்பதாக சென்னை பெருநகர ஆணையருக்கு தகவல்கள் வந்தது. இதையடுத்து, சென்னை கொளத்தூர் ரெட்டேரி சிக்னலில் கையில் பையுடன் சுற்றி திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், உரிமம் பெறாத புதுப்பட டிவிடிக்கள் சைனா பஜார் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் புழல் விநாயகபுரத்தை சேர்ந்த ஜெயவேல் என்பதும், செம்பியம் பகுதியை சேர்ந்த ஜமாலுதின் என்பவருடன் சேர்ந்து புழல் பகுதியில் புதுப்பட டிவிடிக்கள், உரிமம் பெறாத டிவிடிக்கள் மற்றும் ஆபாச டிவிடிக்கள், ரைட்டிங் செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஒரு கோடியே 7 லட்சம் மதிப்பிலான 20,560 டிவிடிக்கள், ரைட்டிங் மெஷின், 3 யூபிஎஸ்களை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ஜெயவேல், ஜமாலுதின் ஆகியோர் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com