பாஜக காற்றடைத்த பலூன்; அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்: கேஎஸ்.அழகிரி

பாஜக காற்றடைத்த பலூன்; அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்: கேஎஸ்.அழகிரி
பாஜக காற்றடைத்த பலூன்; அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்: கேஎஸ்.அழகிரி

பா.ஜ.க என்பது காற்றடைத்த பலூன்; அது எப்போது வேண்டுமானலும் வெடிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் புத்தாண்டையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் பேசும்போது...

" ராகுல் காந்தி இந்தியாவிற்கு எடுத்துக்காட்டான தலைவர். மோடி புதிய விவசாய சட்டத்தை கொண்டு வந்தபோது, மதுரைக்கு வந்த ராகுல் காந்தி, இன்னும் 1 வருடத்தில் இந்த மோடி அரசாங்கம் விவசாய சட்டத்தை திரும்பப்பெறும் என்று கூறினார். அது போலவே நடந்தது. மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம், கலாசாரம் சீரழிந்துள்ளது. இதனை சரி செய்யும் ஆற்றல் ராகுல் காந்தியிடன் தான் உள்ளது.

தமிழகத்தில் தற்போது விடியல் ஏற்பட்டுள்ளது. தவறு நடக்கும் இடத்திற்கு முதல்வர் செல்கிறார், தவறானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது, சொந்த கட்சிக் காரர்கள் தவறு செய்தால் கூட கண்டிக்கப்படுகிறார்கள். இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இந்தியாவின் மாடலாக தமிழகம் திகழ்கிறது. மேலும் பல சீர்திருத்தங்கள் தமிழகத்தில் வேண்டும். குறிப்பாக விவசாயம் , தொழில், கல்வி போன்ற துறைகளில் சீர்திருத்தம் தேவை.

ஜனவரி 7,8,9 ஆகிய தேதிகளில் ஏலகிரியில் தமிழக காங்கிரஸ் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்த முகாம் நடத்தப்படும். தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதற்கு மீண்டும் அடைப்பு என்பது தேவையில்லாத ஒன்று. முகக் கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்துவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

பா.ஜ.க என்பது காற்றடைத்த பலூன்; அது எப்போது வேண்டுமானலும் வெடிக்கும். அவர்கள் ஒரு கற்பனை கதை. பாஜக ஆளும் கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது போல இனி நாட்டில் இருந்து பாஜக அகற்றப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com