’இளையராஜா இன்னும் இளமைக் கூடியவராய் ‘இளமை இதோ இதோ’ பாடல் பாடியதைப் பார்த்தேன்” என்று இளையராஜாவின் வீடியோவை பாராட்டி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் - அம்பிகா நடிப்பில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான ‘சகலகலா வல்லவன்’ படத்தின் ‘இளமை இதோ இதோ’ பாடல்தான் ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் தமிழர்களின் தேசிய கீதமாய் ஒலித்து வருகிறது. இளையராஜாவுக்குப் பின் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்துள்ளனர். ஆனால், இப்பாடலை முறியடிக்கும் பாடல் இதுவரை வெளியாகவில்லை என்பதே உண்மை. அந்தளவிற்கு இளமைத்துள்ளலுடன் இருக்கும் இப்பாடலை ட்ரெண்ட் மாறிய 2கே கிட்ஸ்களும் கேட்டு ரசிக்கும்படி புதுமையுடன் படைத்திருப்பார் இளையராஜா. இந்த நிலையில், நாளை புத்தாண்டையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இளமை இதோ இதோ’ பாடலைப் குதூகலத்துடன் பாடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் இளையராஜா.
அதனை ரீட்வீட் செய்துள்ள நடிகர் கமல்ஹாசன், ”இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன். இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார். அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year” என்று வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
Loading More post
'ByeByeModi' என்ற வாசகத்துடன் பேனர்! - வருகைக்கு 2 நாள் முன்பே ஹைதராபாத்தில் பரபரப்பு
“அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு..”.. ஈபிஎஸ் எழுதிய கடிதமும், பின்னணியும்!
ஆதாருடன் பான் எண்ணை இணைத்துவிட்டீர்களா? இனி இரு மடங்கு அபராதம்
உட்கட்சி பிரச்னை - உள்ளாட்சி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக களமிறங்கும் அதிமுகவினர்
”ஃபோனை விட இதுலதான் MIக்கு லாபமே கிடைக்குதாம்” - Xiaomi பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!