Published : 31,Dec 2021 12:25 PM
நாகையில் அதி கனமழைக்கு வாய்ப்பு

நாகை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர், விழுப்புரத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் பெய்த மழையின் அளவு: பகுதிவாரியான முழு விவரம்