Published : 31,Dec 2021 11:23 AM

தமிழகம், புதுச்சேரியில் இயல்பைவிட 59% அதிக மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

According-to-the-Chennai-Meteorological-Department-Tamil-Nadu-and-Pondicherry-received-59--more-rainfall-than-normal

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 59% அதிக மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், கடந்த அக்டோபர் 1 முதல் நேற்று (டிச.30) வரை பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 45 சென்டிமீட்டர். ஆனால் பெய்திருக்கும் மழையின் அளவு 71 செ.மீட்டர். அதிக அளவாக விழுப்புரம் மாவட்டத்தில் 119% மழை பதிவாகியுள்ளது. அங்கு பெய்ய வேண்டிய மழை 55 செ.மீ. மட்டுமே; ஆனால் பெய்த மழை 121 செ.மீட்டர். இதேபோல சென்னையில் 74% அதிக மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சென்னை மழை: நள்ளிரவில் வெள்ளம் பாதித்த இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்