Published : 31,Dec 2021 07:21 AM

தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Moderate-rain-possible-in-14-Districts-of-Tamil-Nadu-Including-Chennai-District

தலைநகர் சென்னையை தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட சுமார் 14 மாவட்டங்களில் மிதமான மழை தொடர வாய்ப்பு. திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திவாசிய சேவை வழங்கும் அலுவலகங்கள் இயங்கும் என அறிவிப்பு. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்