Published : 30,Dec 2021 03:45 PM

”வரவேண்டிய நேரத்தில் வருவார் ராஜேந்திர பாலாஜி”- முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் பேட்டி

Former-MLA-Rajawarman-informs-that-Ex-Minister-Rajendra-Balaji-will-come-at-the-right-time

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வரவேண்டிய நேரத்தில் வருவார் என முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளார். தனிப்படை மூலம் தேடப்பட்டுவரும் அவர் குறித்து, அவருடன் தொடர்பில் இருந்த முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மற்றும் ராஜேந்திர பாலாஜியின் நேரடி உதவியாளர் சீனிவாசன் ஆகியோரிடம் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் மதுரை சரக டிஐஜி காமினி மற்று எஸ்பி தலைமையில் இன்று விசாரணை நடந்தது.

image

ஏற்கனவே கடந்த 18ஆம் தேதி இவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வந்தநிலையில், தற்போது இரண்டாவது முறையாக ராஜவர்மணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணை முடிந்து வெளியே வந்தபோது செய்தியாளர்கள் மத்தியில் ராஜவர்மன் பேட்டியளித்திருந்தார். அப்போது, “வர வேண்டிய நேரத்தில் ராஜேந்திர பாலாஜி வருவார். ஓடி ஒளியும் அளவிற்கு அவர் கொலை குற்றம் செய்யவில்லை. நீதிமன்றம் மூலம், தான் நிரபராதி என ராஜேந்திர பாலாஜி நிரூபிப்பார்” என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி:ஆவின் நிறுவனத்தில் மேலும் ஒரு மோசடி அம்பலம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்