[X] Close

ஒரேநாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா; ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பு: அச்சத்தில் அமெரிக்கா

கொரோனா வைரஸ்

America-hit-a-record-average-of-daily-new-Covid-19-cases

அமெரிக்காவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு வருவது மக்களை அச்சத்துக்குள்ளாகி வருகிறது.

ஒரே நாளில் 4,65,000 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தினந்தோறும் அனுமதிக்கப்பட்டு வருவதால், அங்குள்ள படுக்கைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் ஒரே நாளில் 1,674பேர் கொரோனா தொற்றால் அங்கு உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 8,44,000 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து குறிப்பிடத்தக்கது.

image


Advertisement

பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரிப்பதை தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவைப் போல, மற்ற நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் 1,83,000 பேருக்கும், பிரான்சில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயினிலும் தொற்று பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி: அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close