சென்னையில் கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 0.6 சதவீதமாக இருந்த கொரோனா பாதிப்பு விகிதம், இந்த மாதம் கிட்டத்தட்ட ஒரு சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் போது கடந்த மே மாதம் சென்னையில் 7,564 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு, படிப்படியாக குறைந்து கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி 105ஆக பதிவானது. கடந்த வாரம் வரை தினசரி பாதிப்பு 115 முதல் 132 வரையே பதிவாகி வந்தது. தற்போது, சென்னையில் புதிய பாதிப்பு 194 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 619 பேருக்கு புதிதாக தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், அதில் மூன்றில் ஒரு பகுதி பாதிப்பு சென்னையில் பதிவாகியிருப்பது தொற்று பரவலின் வேகத்தை குறிப்பதாக உள்ளது.
திண்டுக்கல்: 25 பவுன் நகையை கொள்ளையடித்து தடயத்தை அழிக்க வீட்டை எரித்த கொள்ளையர்கள்
குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் வேலைபார்க்கும் இடங்கள் மூலமாக சென்னையில் தொற்று பரவல் இருப்பதாகவும், வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வருவோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்த எண்ணிக்கையும் சென்னை பாதிப்பு கணக்குடன் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்