வரும் புத்தாண்டையொட்டி நடிகர் விக்ரமின் ’மகான்’ டீசர் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'மகான்' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது. சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'மகான்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில், இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. படம் பொங்கலையொட்டி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வரும் புத்தாண்டையொட்டி ‘மகான்’ படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதியையும் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் படக்குழு அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அடுத்ததாக பா.ரஞ்சித்தின் ’விக்ரம் 61’படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix