தென்னை மரம் ஏறுபவர்களுக்கும், பதநீர் இறக்கும் கலைஞர்களுக்கும் கூடுதல் “கேரா சுரக்ஷா” காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளர்ச்சி வாரியம் அமல்படுத்தி உள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மதிப்பு ரூ.5 லட்சம். இது விபத்துக் காப்பீடு பாலிசி. இதில் 1 லட்சம் ரூபாய் வரை மருத்துவமனைக் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. “தென்னை மர நண்பர்கள் பயிற்சித் திட்டம், பதனீர் இறக்கும் கலைஞர்கள் பயிற்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் முதலாண்டு பிரீமியம் தொகை ரூ.398.65-ஐ தென்னை வளர்ச்சி வாரியம் ஏற்கும். ஓராண்டு முடிந்ததும் பிரீமியம் தொகையில் 25 சதவீதம் ரூ.99-ஐ செலுத்தி பாலிசியை பயனாளிகள் புதுப்பித்துக் கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயது வரையுள்ள தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறலாம்.
இதற்கான விண்ணப்பத்தை வேளாண் அதிகாரி, பஞ்சாயத்துத் தலைவர், சிபிஃஎப் அலுவலக அதிகாரிகள், சிபிசி இயக்குநர்கள் ஆகியோர் கையெழுத்தைப் பெற்று எர்ணாகுளத்தில் மாற்றும் வகையில் ரூ.99 மதிப்புள்ள டிடி தென்னை வளர்ச்சி வாரியத்திற்கு அனுப்பி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம் என கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பம் மற்றும் விவரங்கள் www.coconutboard.gov.in. என்ற இணையதளத்தில் உள்ளது.
Source : PIB
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?