
வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், வாகனங்கள், வீடுகள் முழுவதும் உறை பனி சூழ்ந்து காணப்படுகிறது. வாகனங்களில் டீசல் உறைவதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் மழை போன்று பெய்யும் பனியால் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்துள்ளனர். இதே போல, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவால், நீர்நிலைகள் உறைந்து காணப்படுகின்றன.