தெ.ஆ.வுக்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், தவானுக்கு வாய்ப்பு?

தெ.ஆ.வுக்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், தவானுக்கு வாய்ப்பு?
தெ.ஆ.வுக்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், தவானுக்கு வாய்ப்பு?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான், அஷ்வின் இடம் பெற வாய்ப்பு உண்டு.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டி ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி ஒரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த தொடரில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியை தற்போது காணலாம்.
ஒயிட் பால் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா பயிற்சியின்போது தொடையில் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் முதற்கட்ட உடற்தகுதியில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை தாங்க உள்ளது உறுதியாகிவிட்டது. 
ஒருநாள் தொடரில் மீண்டும் இடம் பெற காத்திருக்கிறார் ஷிகர் தவான். டி20 போட்டிகளில் தனக்கான இடத்தை இழந்துவிட்டாலும், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகவே அவர் ஆடிவருகிறார். எனவே ரோஹித் சர்மா தனது நீண்டகால ஓபனிங் பார்ட்னரான ஷிகர் தவானுடன் இறங்குவார் எனத் தெரிகிறது. ஐபிஎல், விஜய் ஹசாரே தொடரில் அசத்திய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் இடம் பெறலாம். சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் கடைசியாக 2017ல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். ஒருவழியாக சமீபத்திய 'டி-20' உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு பெற்றார். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டதால் மீண்டும் அஷ்வின் பக்கம் அதிர்ஷ்டம் வீசலாம். கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக சாஹல் களமிறங்க வாய்ப்புள்ளது. நடுவரிசையில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்ஆகியோர் தேர்வாக வாய்ப்புள்ளது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் மற்றும் ஆல்ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் தேர்வாக வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, தீபக் சாஹர் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்திய உத்தேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்/ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com