[X] Close

நோபல் பரிசு பெற்ற சமூக செயற்பாட்டாளர் டெஸ்மாண்ட் டுட்டு மறைவு - உலகத்தலைவர்கள் இரங்கல்

உலகம்

Nobel-Prize-winning-social-activist-Desmond-Tutu-death--World-leaders-mourn

தென்னாப்ரிக்காவில் நிற வெறிக்கு எதிராக போராடிய சமூக செயற்பாட்டாளரும், பேராயருமான டெஸ்மண்ட் டுட்டு ‌‌‌‌‌‌‌‌‌‌ மறைவுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து ராணி எலிசபெத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

90 வயதான டுட்டு புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று காலமானார். தென்னாப்ரிக்காவில் இனவெறிக்கு எதிராகவும், ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காகவும் டெஸ்மண்ட் டுட்டு குரல் கொடுத்துள்ளார். அவரது சிறப்பான சேவைகளை பாராட்டி 1984 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

image


Advertisement

இந்நிலையில் 1990 ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த டெஸ்மண்ட், கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தென்னாப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் வைக்கப்பட்டுள்ள டுட்டுவின் உடலுக்கு ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close