ஊட்டி ஹெலிகாப்டர் விபத்து: எஞ்சிய பாகங்களை மீட்டபின் கிராமத்திலிருந்து வெளியேறியது ராணுவம்

ஊட்டி ஹெலிகாப்டர் விபத்து: எஞ்சிய பாகங்களை மீட்டபின் கிராமத்திலிருந்து வெளியேறியது ராணுவம்
ஊட்டி ஹெலிகாப்டர் விபத்து: எஞ்சிய பாகங்களை மீட்டபின் கிராமத்திலிருந்து வெளியேறியது ராணுவம்

உதகையில் கடந்த 8ஆம் தேதி குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரின் முக்கிய பாகத்தை வனப்பகுதியில் இருந்து சூலூர் விமானப்படை விமான நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

குன்னூரில் கடந்த 8 ஆம் தேதி, ஹெலிகாப்டர் விபத்து நடந்த நச்சப்பசத்திரம் பகுதியில், விபத்து நடந்த நாள் முதல் ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து கோவையில் இருந்து வந்த விமானப்படை அதிகாரிகள், ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர், ஹெலிகாப்டரின் சில பெரிய பாகங்களை அங்கிருந்த அகற்ற பத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களை தங்களுடன் ராணுவத்தினர் அழைத்து வந்தனர்.

இவர்கள் ராணுவ அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி ஹெலிகாப்டர் பாகங்களை தனித்தனியாக பிரித்து வைத்தனர். இந்நிலையில், சிதறிய பொருட்களை அவ்வப்போது ராணுவ வாகனம் மற்றும் தனியார் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து விஞ்ச் ரோப் அமைத்து மீதமிருந்த என்ஜின் மற்றும் வால் பகுதிகளை இரவு நேரத்தில் அங்கிருந்து எடுத்தனர். தலா 1.5 டன் எடையுள்ள இரண்டு பொருட்களும் மிகவும் முக்கியம் என்பதால் இவை மேலும் பாதிப்படையாமல் பத்திரமாக பாதுகாப்புடன் எடுக்கப்பட்டது,

உயரதிகாரிகளின் ஆலோசனைக்குப் பின், ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நச்சப்ப சத்திரம் பகுதியில் 19 நாட்களுக்குப் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் போட்டோ எடுத்துக் கொண்ட ராணுவ அதிகாரிகள் நஞ்சப்பசத்திரம் பகுதியில் இருந்து வெளியேறினர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com