முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 மோசடி புகார்கள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 மோசடி புகார்கள்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 மோசடி புகார்கள்

பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 மோசடி புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படையினர் தேடி வருகின்றனர். கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் 8 தனிப்படைகள் முகாமிட்டுள்ளன. வெவ்வேறு கார்களில் மாறி மாறிச் சென்று அவர் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், விமானம் மூலம் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது பெயரில் உள்ள 6 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மேலும் 3 மோசடி புகார்கள் வந்துள்ளன. சிவகாசியைச் சேர்ந்த நபருக்கு உதவி மக்கள் தொடர்பாளர் பணியும், மதுரையைச் சேர்ந்த நபருக்கு மாநகராட்சி அலுவலக உதவியாளர் பணியும், கடலூரைச் சேர்ந்த நபருக்கு இந்து அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் பணியும் வாங்கி தருவதாக கூறி தலா 7 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் கிடைத்துள்ளன. புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com