Published : 26,Dec 2021 03:22 PM
நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்ததாக தகவல்!

பாலிவுட் சினிமா நடிகர் சல்மான் கானை பாம்பு ஒன்று கடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை அன்று அவரது மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் (Panvel) பகுதியில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் நடந்துள்ளதாக தெரிவிக்கட்டப்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமாக நடிகர் சல்மான் கான் கிறிஸ்துமஸ் மற்றும் தனது பிறந்தநாளை இந்த பண்ணை வீட்டில் கொண்டாடுவது வழக்கம். அந்த கொண்டாட்டத்திற்காக அவர் குடும்பத்துடன் அங்கு வந்து தங்கியிருந்துள்ளார். அப்போது பாம்பு அவரை கடித்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி அவரை கடித்தது விஷமற்ற பாம்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் அவரது குடும்பம் ஏதும் அறிக்கை அளிக்காமல் உள்ளது. பாலிவுட் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் சல்மான் கானும் ஒருவர். 55 வயதான அவருக்கு நாளை பிறந்தநாள்.