தமிழகத்தில் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’யின்கீழ் கடந்த 3 வாரத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் 871 பேரை கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 06.12.2021 முதல் கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி விற்பனைகளை தமிழகத்தில் தடுக்கும் பொருட்டு தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக "ஆபரேஷன் கஞ்சா வேட்டை" என்ற பெயரில் அதிரடி சோதனையொன்று சமீபத்தில் நடத்தப்பட்டது. அந்த சோதனையில் 6,623 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக இதுவரை தமிழகத்தில் பிடிக்காத அளவிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 23 கிலோ போதை தரக்குடிய ஹெராயின் என்ற போதை பொருளை பிடித்து அதை பதிக்கிவைத்திருந்த 7 குற்றவாளிகளையும் கைது செய்யப்பட்டனர். இதன் மதிப்பு 23 கோடி என சொல்லப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரத்தில், கஞ்சா விற்பனை கடத்தியதற்காக 816 வழக்குகள் பதியப்பட்டு 871 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 1.80 கோடி மதிப்புள்ள 1774 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 164 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழக முழுவதும் கஞ்சா விற்பனை செய்த மொத்த வியாபாரி பெரியசாமி, மற்றும் சீனிவாசன் என்பவர்களை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நாமக்கல் போலீசார் கைது செய்தனர். இந்த பெரிய குற்றவாளிகளை கைது செய்ததன் மூலம் கஞ்சா விற்பனை மொத்த வியாபாரம் பெருமளவில் முடக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் 21 கிலோ கஞ்சா, மதுரை மாவட்டத்தில் 21 கிலோ கஞ்சா மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 82 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைபோல, சட்ட விரோத புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தியதற்காக 5457 வழக்குகளில் 5037 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ 4.20 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சென்னை பூந்தமல்லியில் 1200 கிலோ, திருச்சி மாநகரத்தில் 540 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 66 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வாரத்தில் தடைசெய்யப்பட்ட 816 லாட்டரி வழக்குகளில் 1091 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ 35.40 இலட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரிகளின் விற்பனையாளர், பதுக்கி வைப்போர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை தொடர்வதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை பற்றிய விவரங்களை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் 100, 112 மற்றும் அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்களில் தகவல் தரலாம் எனவும் தமிழ்நாடு காவல்துறையின் சமூக வலைதளங்களான முகநூல்: https://www.facebook.com/tnpoliceofficial, டிவிட்டர்: @tnpoliceoffl மற்றும் வாட்ஸ்ஆப்: 94981-11191 ஆகிய சமூக ஊடகங்களில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி: கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளித்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம் – திருவள்ளூர் எஸ்.பி
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?