காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை

காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

சோபியான் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தபோது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட பதிலடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் மூவரும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து தாக்குதல் நடத்திவந்த பயங்கரவாதிகள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல் அவந்திபுராவிலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com