சத்தியமங்கலத்தில் பள்ளிவிடும் நேரத்தில் பஸ் இல்லாததால் வீட்டிற்குச் செல்வதில் சிரமம் ஏற்படுவதால், கூடுதல் பஸ் விடுமாறு அரசுப்பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பேருந்துகளை நம்பியே பயணிக்கினறனர். இந்நிலையில், சத்தியமங்கலம் வாரச்சந்தை அருகே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுவதால் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் வாரசந்தையில் இருந்து பேருந்து நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து மீண்டும் பேருந்தில் தங்களது கிராமங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
இதையடுத்து இன்று பள்ளி முடிந்து சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக வாரச்சந்தை முன்பு நின்றிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டவுன் பஸ்ஸில் மாணவர்கள் ஏறியபோது, ஒருசில மாணவர்களை மட்டும் ஏற்றிக்கொண்டு, 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.
மாலை நேரங்களில் ஒரிரு பேருந்துகள் மட்டுமே அவ்வழியாக வருகின்றன. இதில், ஒருசில மாணவர்களை மட்டுமே ஏற்றிக்கொண்டு பெரும்பாலான மாணவர்களை ஏற்றாமல் செல்வதால் அவர்கள் 2 கி.மீ தூரமுள்ள பேருந்து நிலையத்திற்கு நடந்தே செல்கின்றனர். அதற்குள் அவர்கள் கிராமத்துக்குச் செல்லும் பேருந்துகள் சென்றுவிடுகின்றன. இதனால் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்