சென்னை வந்தடைந்தன புதிய 200 ரூபாய் நோட்டுகள்

சென்னை வந்தடைந்தன புதிய 200 ரூபாய் நோட்டுகள்
சென்னை வந்தடைந்தன புதிய 200 ரூபாய் நோட்டுகள்

ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய 200 ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தடைந்துள்ளன.

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து புதிய 50 ரூபாய் நோட்டும் வெளியாகும் என்று கூறப்பட்டது.

அதன்படி புதிய 200 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய 200 ரூபாய் நோட்டுகள் முதல் கட்டமாக சென்னை ரிசர்வ் வங்கியை வந்தடைந்துள்ளன. குறிப்பிட்ட வங்கிகளில் மட்டுமே முதலில் கிடைக்கவுள்ள இந்த நோட்டுகள் விரைவில் அனைத்து வங்களிலும் கிடைக்க உள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com