Published : 23,Dec 2021 08:54 AM
சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசை: ஆஸி., வீரர் லபுஷேன் முதலிடம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் லபுஷேன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆஷஷ் இரண்டாவது டெஸ்ட் போட்டியை அடுத்து ஐசிசி தரவரிசை பட்டியல் புதுப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. ஆஷஷ் இரண்டாவது டெஸ்ட்டில் ஒரு சதம் மற்றும் அரைசதம் விளாசியதன் மூலம் இங்கிலாந்தின் கேப்டன் ஜோ ரூட்டை பின்னுக்குத் தள்ளி லபுஷேன் முதலிடத்திற்கு முன்னேறினார். இப்பட்டியலில் இந்திய வீரர் ரோகித் சர்மா ஐந்தாவது இடத்திலும், கோலி ஏழாவது இடத்திலும் உள்ளனர்.