'83' படத்திற்காக '1983 உலக கோப்பை' அணிக்கு செலுத்தப்பட்ட கட்டணம் - என்ன காரணம்?

'83' படத்திற்காக '1983 உலக கோப்பை' அணிக்கு செலுத்தப்பட்ட கட்டணம் - என்ன காரணம்?
'83' படத்திற்காக '1983 உலக கோப்பை' அணிக்கு செலுத்தப்பட்ட கட்டணம் - என்ன காரணம்?

83 படக்குழு சார்பில் 1983ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.15கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1983ம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி வெற்றிபெற்றதை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் '83'. ரன்வீர் சிங் நடிக்கும் இந்த படத்தை கபீர்கான் இயக்குகிறார். ஜீவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அண்மையில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இதன்மூலம் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் கபில்தேவ் உள்ளிட்ட 1983ம் ஆண்டு இந்திய அணிக்கான குழுவைச்சேர்ந்தவர்களுக்கு, அவர்களின் கதாபாத்திரத்தை பயன்படுத்தியதற்காக பணம் வழங்கப்பட்டுள்ளது.

Bollywoodhungama.com வெளியிட்டுள்ள தகவலின்படி, '83' திரைப்படத்திற்காக 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர்கள் தோராயமாக 15 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். கபில்தேவ்க்கு மட்டும் 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

''உண்மை கதையை தழுவி, அதில் உள்ள உண்மையான வீரர்களின் நிகழ்வுகளை படமாக்கும்போது, படத்தை தயாரிப்பவர்கள் அதற்கு உரிய தொகையை கொடுத்துவிட வேண்டும். அந்த வகையில் 83 படக்குழு சார்பில் 1983 உலக கோப்பை அணி வீரர்களுக்கு 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அணியை வழிநடத்தி சென்றதற்காக கபில்தேவ்-க்கு ரூ.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. சமீபத்தில், உலகின் மிக உயரமான கட்டடமான துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் படத்தின் டிரைலர் காட்சிப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ரன்வீர் '83' இயக்குனர் கபீர் கான் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோனேவுடன் துபாயில் இருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com