Published : 22,Dec 2021 09:39 AM

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 220 ஆக உயர்வு

As-it-spreads-to-the-states-of-Jammu-and-Kashmir-and-Odisha-the-incidence-of-omicron-in-India-has-increased-to-220
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கும் பரவிய நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 220 ஆக அதிகரித்துள்ளது.
 
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் டிசம்பர் 2-ஆம் தேதி கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் ஒமைக்ரான் வேகமாக பரவியது. மகாராஷ்டிராவில் 65 பேருக்கும், தெலங்கானாவில் 14 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
 
image
இந்த நிலையில், எவ்வித வெளிநாடு பயணமும் மேற்கொள்ளாத மூவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. இதேபோல ஒடிசாவில் இருவருக்கும் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் 77 பேர் குணமடைந்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
image
இந்த சூழ்நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடகாவில் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை பொது நிகழ்ச்சிகளுக்கும், விருந்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்