
வரும் 2022-இல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சில முக்கிய தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அமைச்சரவை. அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறையும் இதில் அடங்கும். இதன் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரே நபர் வெவ்வேறு தொகுதிகளில் வாக்களராக பதிவு செய்திருப்பதை தடுக்க இந்த நடைமுறை உதவும் என சொல்லப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
தேசிய வாக்காளர் சேவையகத்தின் அதிகாரபூர்வ வலைதளம், குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு என மூன்று விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
தேசிய வாக்காளர் சேவையகத்தின் இணைப்பதற்கான வழிகள்!
> https://voterportal.eci.gov.in/ என்ற வலைதளபக்கத்திற்கு செல்ல வேண்டும்.
> மொபைல் எண், இமெயில் ஐடி, வாக்காளர் அடையாள அட்டையின் எண் மாதிரியானவற்றை கொண்டு லாக்-இன் செய்ய வேண்டும். இந்த விவரங்களை கொடுத்து புதிதாக அக்கவுண்ட் உருவாக்கி கொள்ளும் வழிகளும் உள்ளன.
> அடுத்ததாக வாக்காளின் பெயர், ஊர், மாவட்டம், மாநிலம் உட்பட அனைத்து சுய விவரங்களையும் கொடுக்க வேண்டும்.
> பின்னர் ‘Search’ பட்டனை க்ளிக் செய்து பயனர்கள் கொடுத்துள்ள விவரங்கள் அரசின் தரவுகளில் உள்ள விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
> சரியாக இருக்கும் பட்சத்தில் ‘Feed Aadhaar No’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து ஆதாரில் உள்ள விவரங்களை உள்ளிட வேண்டும்.
> பின்னர் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா? என்பதை கிராஸ்-செக் செய்து ‘Submit’ கொடுக்க வேண்டும்.
> இறுதியாக பயனரின் விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற மெசேஜ் டிஸ்பிளே ஆகும்.
இதே போல 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலமாகவும், 1950 என்ற தொலைபேசி எண்ணுக்கு போன் செய்வதன் மூலமாகவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.