Published : 24,Aug 2017 04:10 PM

விநாயகர் சதூர்த்தியன்றும் கலந்தாய்வு உண்டு

medical-counselling-held-in-holidays-by-neet-exam

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மாணவர்களின் வசதிக்காக கலந்தாய்‌வு கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்தவும் ஏற்பாடு செய்‌யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் முதன்முறையாக நீட் தேர்வு அடிப்படையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல்நாளான இன்று சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான 29 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கு 20 இடங்களும், விளையாட்டு வீரர்களுக்கு 3 இடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு பொது மருத்துவத்திற்கான 5 இடங்களும், பல் மருத்துவத்திற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தன. 

86 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி வரை அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சனி, ஞாயிறு கிழமைகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு‌ எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதால், கலந்தாய்வு நடைபெறும் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்