Published : 24,Aug 2017 04:02 PM
கமலோடு இணைந்து மீண்டும் வாழ்க்கை?: கவுதமி விளக்கம்

மீண்டும் கமலோடு இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாக பரவிய தகவலுக்கு நடிகை கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்த கவுதமி, சில மாதங்களுக்கு முன் அவரிடமிருந்து பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் கமலோடு கவுதமி இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாகவும், அவருடன் நெருக்கம் காட்டுவதால், மீண்டும் கமலும், கௌதமியும் இணைய இருப்பதாகவும் வீடியோ செய்தி ஒன்று வெளிவந்தது. அந்த வீடியோவை வெளியிட்டு அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள்ள கவுதமி ‘முட்டாள்கள் அர்த்தமற்று பேசுகிறார்கள். நாய்கள் குரைக்கும். நான் விலகி வந்துவிட்டேன். எல்லோரும் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளதான் வேண்டும். எது முக்கியமோ அதை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.