Published : 17,Dec 2021 12:58 PM

’பீஸ்ட்’ அப்டேட்: புத்தாண்டில் வெளியாகும் முதல் பாடல்

actor-vijay-beast-first-Single-Releasing-On-2022-New-Year-January

புத்தாண்டையொட்டி நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ முதல் பாடல் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையையொட்டி வெளியாகும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

image

இதனால், புத்தாண்டிற்கு முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான, அறிவிப்பு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகிறது. இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வரிகளில் விஜய் பாடியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே, சிவகார்த்திகேயன் பல்வேறு பேட்டிகளில் ’பீஸ்ட்’ படத்தில் பாடல் எழுதியிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்