Published : 17,Dec 2021 10:06 AM
இந்தியாவில் ஒரே நாளில் 7,447 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 7,447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 3,47,18,602-ல் இருந்து 3,47,26,049 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 7,886 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,54,879ல் இருந்து 3,41,62,765 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 391 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 4,76,478ல் இருந்து 4,76,869 ஆக உயர்ந்துள்ளது.