பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், வங்கிகள் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய அளவில் அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் நேற்று முதல் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக அரசுடன் நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் ஊழியர்களின் இந்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.
நேற்றைய தினம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து வங்கிகள் சங்க கூட்டமைப்பினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் பேர் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்று இருப்பதால் தினசரி வங்கி சேவைகள், காசோலை மற்றும் வரைவோலை பரிமாற்றங்கள் , ஏடிஎம் சேவைகள் என வங்கிகளின் பல கோடி மதிப்பிலான பண பரிவர்தனை சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறியுள்ளனர். ஆகவே மத்திய அரசு தன் முடிவை கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் ஊழியர்களும், தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.
தொடர்புடைய செய்தி: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க எதிர்ப்பு - வங்கி ஊழியர்கள் 2நாள் வேலைநிறுத்தம்
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்