மகளை தாயாக்கி உறவுக்கார இளைஞர் மீது பழிபோட்ட தந்தை: டிஎன்ஏ சோதனையில் அம்பலம்

மகளை தாயாக்கி உறவுக்கார இளைஞர் மீது பழிபோட்ட தந்தை: டிஎன்ஏ சோதனையில் அம்பலம்
மகளை தாயாக்கி உறவுக்கார இளைஞர் மீது பழிபோட்ட தந்தை: டிஎன்ஏ சோதனையில் அம்பலம்

தேனி அருகே பெற்ற மகளை தாயாக்கிய தந்தை கைது செய்யப்பட்டார். தவறு செய்துவிட்டு உறவுக்கார இளைஞர்  மீது பழி சுமத்தியது டிஎன்ஏ சோதனையில் அம்பலமானது.

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்த திருமணமாகாத 16 வயது சிறுமிக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமியும், சிறுமியின் தந்தையான சாமியாரும் சேர்ந்து தேவதானப்பட்டி அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்த உறவுக்கார பையன் ஒருவர்தான் இந்த குழந்தைக்கு தந்தை என்று கூறி அவர் மீது புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் உறவுக்கார பையனை கைது செய்த தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து அந்த குழந்தைக்கு தான் தந்தை இல்லை என்று கூறிய அந்த இளைஞர், டி.என்.ஏ பரிசோதனைக்கு தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அந்த இளைஞர், சிறுமி மற்றும் பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் அந்த குழந்தை இளைஞருக்கு பிறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் தந்தை மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரது டி.என்.ஏ.வை பரிசோதனை செய்தபோது அவர்தான் குழந்தைக்கு உண்மையான தந்தை என்பதும், தன் மகளுடன் பெற்ற தந்தையே பாலியல் உறவு கொண்டு தாயாக்கியதுடன் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று கருதி உறவுக்காரப் பையன் மீது பழியைப் போட்டு அவரை சிறையில் அடைத்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த தந்தையை கைது செய்த தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரியகுளம் சிறையில் அடைத்தனர். அந்த சிறுமியையும், சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தையையும் போலீசார் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com