வேலூர் மாநகரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கைவரிசை காட்டிய கும்பலை 4 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கடைக்கு வெளியே சிசிடிவி கேமரா இல்லாததால் விசாரணையில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வேலூர் மாநகரின் முக்கிய பகுதியான தோட்டப்பாளையத்தில் அமைந்துள்ளது ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை. நேற்று வழக்கம்போல கடையை திறந்தபோது நகைகள் உள்ள அலமாரிகளும், லாக்கரும் உடைக்கப்பட்டு கொள்ளை போயிருப்பது தெரிந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சுமார் 35 கிலோ வரையிலான தங்கம், வைர நகைகள் கொள்ளை போயிருப்பதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி. பாபு மற்றும் வேலூர் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். கடையில் இருப்பு உள்ள நகைகளை நேற்று இரவு வரை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அதன் அடிப்படையில் கடையின் தரை தளத்தில் இருந்த 15 கிலோ தங்க நகைகள், 500 கிராம் வைர நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது.
ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் கைவரிசை காட்டிய நகை கொள்ளையர்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்துள்ளனர் காவல்துறையினர். கொள்ளை நடந்த கடையின் சுவரோரம் "விக்" ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக கடையில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொள்ளையர்கள் சிசிடிவி கேமராக்களில் ஸ்ப்ரே அடித்து தப்பிச்சென்றுள்ளனர். நகை கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களையும், வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையை தொடந்து வேலூர் மாநகர் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் மாவட்ட எல்லை சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை