Published : 24,Aug 2017 11:02 AM

தெலங்கானாவில் டிஆர்எஸ்-காங்கிரஸ் கட்சியினர் கைகலப்பு

TRS-Congress-party-in-Telangana

தெலங்கானாவில் கரீம்நகர் மாவட்டத்தில் நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில் டிஆர்எஸ்-காங்கிரஸ் கட்சியினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் காலேஸ்வரம் நீர்பாசன திட்டம் தொடர்பான கருத்துகேட்பு கூட்டத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். 

பேடபள்ளி பகுதியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் அரசியல் கட்சியினர் உள்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இரு அரசியல் கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். அங்கிருந்த சேர்களை வீசியும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால் அக்கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்