Published : 15,Dec 2021 03:36 PM
அதிமுக தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம்: சசிகலா

அதிமுகவின் சட்டவிதிகள் அழிந்துவிடாமல் அதற்கு வலுசேர்க்கும் வேலைகளை முதலில் செய்ய வேண்டும் என தமது தொண்டர்களை சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், கட்சியில் ஒரு சிலர் மட்டும் எல்லாவித பலன்களை அடைவதை அடிமட்டத் தொண்டர்கள் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
அதிமுக தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம் என்றும், எம்ஜிஆர் கண்ட கனவு நனவாகும் காலம் நெருங்கிவிட்டதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
இதனைப்படிக்க...மாநிலங்களுக்கு இதுவரை 140.47 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கியுள்ள மத்திய அரசு