Published : 24,Aug 2017 08:01 AM

சபாநாயகருடன் முதல்வர் திடீர் ஆலோசனை

Chief-Minister-s-sudden-advice-to-speaker

சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

பேரவையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையிலும், தனபாலை முதல்வராக்க வேண்டும் என, தினகரன் அணியினர் கூறி வரும் சூழலிலும், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சபாநாயகரை தொடர்ந்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன் நடைபெற்ற ஆலோசனையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடனிருந்தார். 

பொதுக்குழுவை கூட்டி கட்சியில் இருந்து சசிகலாவை நீக்குவது, நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்து பேசியதாகத் தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்