பீகார்: தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை? - பட்டியலின மக்களை துன்புறுத்திய வேட்பாளர் கைது

பீகார்: தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை? - பட்டியலின மக்களை துன்புறுத்திய வேட்பாளர் கைது
பீகார்: தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை? - பட்டியலின மக்களை துன்புறுத்திய வேட்பாளர் கைது

தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதற்காக பட்டியலின மக்கள் சிலரை துன்புறுத்திய பீகார் மாநில உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பல்வந்த் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ள தும்ரி கிராமத்தில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட பல்வந்த் சிங் என்பவர் தோற்றுப்போனார். தான் தோற்றதற்கு கிராமத்தில் உள்ள பட்டியலின நபர்கள் சிலர் வாக்களிக்காததே காரணம் எனக் கருதிய பல்வந்த் சிங் அவர்களை கடுமையாக துன்புறுத்தியுள்ளார். காலணியால் அடிப்பதும், மோசமான வார்த்தைகளால் திட்டுவதும், அவர்களை துன்புறுத்துவதும் போன்ற வீடியோ காட்சி வெளியாகி பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தான் வாங்கித்தந்த மதுவை குடித்துவிட்டு வாக்களிக்காமல் ஏமாற்றி விட்டதாக பல்வந்த் சிங் கூறும் காட்சியும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் தந்த புகாரின் பேரில் பல்வந்த் சிங்கை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com