சந்தேக மரண வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே அவசர அவசரமாக கைதியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததாக அவரது மனைவி புகார் அளித்துள்ளார். புழல் சிறையில் உயிரிழந்த கணவருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிய நீதிமன்றத்தை நாடியுள்ளார் மனைவி.
சென்னை அருகே செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவரின் கணவர் சீனிவாசன், கொலை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வப்போது சிறைக்கு சென்று கணவரை பார்த்து நலம் விசாரித்து வந்த ஜான்சிராணிக்கு, அது தான் அவர்களது கடைசி சந்திப்பு என்பது தெரியாமல் போனது. அடுத்த வாரம் வெளியே வரவிருந்த சீனிவாசன், கடந்த 10ஆம் தேதி சிறைக்குள் திடீரென உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் ஜான்சிராணி, உடலை வாங்க மறுத்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் உடற்கூராய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, அவசர அவசரமாக கைதி சீனிவாசனின் உடலை கூராய்வு செய்திருப்பதாக குற்றம்சாட்டுகிறார் வழக்கறிஞர் பார்த்தசாரதி.
மனுதாரரின் மருத்துவர் முன்னிலையில் கைதி சீனிவாசனின் உடலை மறுகூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க, அதன்படி மறுகூராய்வு நடத்தப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது. உடற் கூராய்வு அறிக்கைக்கு பிறகே கைதியின் உயிரிழப்பில் உள்ள சந்தேகம் நிவர்த்தியாகும்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்