"ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் பாதிப்புகள் குறைவே"- தென்னாப்ரிக்க மருத்துவர்கள்

"ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் பாதிப்புகள் குறைவே"- தென்னாப்ரிக்க மருத்துவர்கள்
"ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் பாதிப்புகள் குறைவே"- தென்னாப்ரிக்க மருத்துவர்கள்

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் அறிகுறிகள் குறைவாகவே இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 2 வார தனிமைப்படுத்தலில் குணமடைந்துவிடுவதாகவும் தென்னாப்ரிக்காவில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் புதிய அவதாரமான ஒமைக்ரான் திரிபு ‘அதிவேகமாக’ பரவும் என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறைவாகவே இருப்பதாக தென்னாப்ரிக்காவை சேர்ந்த அன்பன் பிள்ளை என்ற மருத்துவர்கள் சங்கத்தின் இயக்குநர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில், “டெல்டா வகை கொரோனாவை விட ஒமைக்ரான் வகை கொரோனா குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது. அவ்வகை தொற்றுள்ளவர்களுக்கும் பெரும்பாலானோர் 10 முதல் 14 நாட்கள் வரையிலான வீட்டு தனிமைப்படுத்தலிலேயே நோய் குணமடைந்து விடுகிறது” என்றுள்ளார்.

இவர் மட்டுமன்றி, ஒமைக்ரான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மற்ற மருத்துவர்களும் இதே போன்ற கருத்தையே தெரிவித்துள்ளனர். “எனினும் இது 2 வார கால புரிதல் மட்டுமே என்பதால், மக்கள் வழக்கமான முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று தென்னாப்ரிக்க மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com