
இயக்குநர் ஷங்கரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருப்பதை பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார்.
இயக்குநர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். அதில், மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் எம்பிபிஎஸ் முடித்திருக்கிறார்.படித்து முடித்தவுடன் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த நிலையில், நடிகை அதிதி ஷங்கர் டாக்டர் பட்டம் தற்போது பெற்றிருக்கிறார்.
அவர் படித்த ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பட்டம் பெறும் புகைப்படத்தையும் மகள் பட்டம் பெறுவதை மகிழ்ச்சியுடன் பார்க்க பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற ஷங்கர் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தையும் உற்சாகமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நடிகை சாய் பல்லவிக்கு அடுத்ததாக டாக்டர் நடிகை அதிதி ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.